June 25, 2006

குறள் எண் 10

குறள்:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

அதிகாரம்: 1.கடவுள் வாழ்த்து

பொருள்: இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்கள், பிறவி எனும் பெருங்கடலை நீந்துவார்கள். அப்படிச் சேராதவர்கள் அப்பெருங்கடலை நீந்திக் கடக்க இயலாது.

June 18, 2006

குறள் எண் 9

குறள்:

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்்
தாளை வணங்காத் தலை.

அதிகாரம்: 1.கடவுள் வாழ்த்து

பொருள்: எட்டு குணங்களை உடைய கடவுளின் பாதங்களை வணங்காதவர்கள், ஐந்து புலன்கள் இருந்தும் அவற்றால் எந்த பயனும் இல்லை.

June 16, 2006

குறள் எண் 8

குறள்:

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

அதிகாரம்: 1.கடவுள் வாழ்த்து

பொருள்: அறங்களை வடிவாக உடைய இறைவனின் அடிகளைச் சேராதவர்கள் அறம் என்னும் கடலில் நீந்த இயலாது.

June 13, 2006

குறள் எண் 7

குறள்:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

அதிகாரம்: 1.கடவுள் வாழ்த்து

பொருள்: ஒருவருக்கும் நிகர் இல்லாத இறைவனின் திருவடியைச் சேராதவற்க்கு , மனதில் நிகழும் துன்பங்களை நீக்குகின்ற பக்குவம் உண்டாகாது.

மன்னிப்பு

வேலைப் பளுவின் காரணமாக சில நாட்கள் குறள்களை பதிக்க இயலவில்லை. மன்னிக்கவும்!

June 09, 2006

குறள் எண் 6

குறள்:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

அதிகாரம்: 1.கடவுள் வாழ்த்து

பொருள்: கடவுளின் பாதையில் சென்று ஐந்து புலன்களினால் ( மெய், வாய், கண், மூக்கு, செவி ) ஏற்படும் ஆசைகளை துறப்பவர்கள், நீடுழி வாழ்வார்கள்.

June 08, 2006

குறள் எண் 5

குறள்:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

அதிகாரம்: 1.கடவுள் வாழ்த்து

பொருள்: இறைவனின் புகழை எப்பொழுதும் பாடுபவர்க்கு, மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினைகள் மற்றும் தீவினைகள் வாரா.

June 07, 2006

குறள் எண் 4

குறள்:

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

அதிகாரம்: 1.கடவுள் வாழ்த்து

பொருள்: ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியை சேர்ந்தார்க்கு எக்காலத்திலும் பிறவித் துன்பங்கள் வாரா.பிறவித் துன்பங்கள் ஆவன - தன்னைப் பற்றி வருவன, பிற உயிர்களைப் பற்றி வருவன மற்றும் தெய்வத்தைப் பற்றி வருவன ஆகும்.